Thursday, January 16, 2025
25.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் இலங்கையர்கள்!

சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் இலங்கையர்கள்!

மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடைபெறும் சில போராட்டங்களால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

அந்த வகையில், சில ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பயணிக்கும் வாகனங்களை வழிமறித்து அவர்களை நடந்து செல்லுமாறு கூறும் சம்பவங்கள் பல்வேறு பகுதிகளில் பதிவாகின்றன.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் நாட்டில் உள்ள நெருக்கடிக்கு எவ்வாறு தீர்வு கிடைக்கும்?

இதன் மூலம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு அர்த்தமில்லாமல் போகிறது.

மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் அரசியல்வாதிகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர்?

சுகயீனமுற்றதால் குழந்தையை வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற தாயை போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பும் காணொளியொன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மனிதாபிமானமற்ற, நோக்கமற்ற இவ்வாறான போராட்டங்கள் நாட்டுக்கு எவ்வாறு நன்மையை ஏற்படுத்தும்?

நாட்டை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவர்கள் நிம்மதியாக இருக்கும்போது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சில போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

டொலர் நெருக்கடி காணப்படும் நிலையில், நாட்டுக்கு வருமானத்தை பெற்றுத் தரும் சுற்றுலாப் பயணிகளை இவ்வாறு துன்புறுத்துவது எவ்வாறு நன்மையளிக்கும்?

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles