காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்த காவல்துறை அதிகாரி பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
அவர் அண்மையில் கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
காவல்துறை சீருடையில் இருந்த போது அவர் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது.