தெற்கு நைஜீரியா நெடுஞ்சாலையில் சிறிய ரக பேருந்து மற்றும் காரும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் குறித்த பேருந்தில் தீப்பரவல் ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துள்ளனர்.
எனினும் பேருந்தில் பயணித்த 20 பேர் தீக்கிரையாகியுள்ளதுடன், சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.