நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சி பாதையில் செல்வதாக விருந்தகம் சார் தொழிற்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கொவிட்-19 பரவலுக்கு பின்னர் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அடைந்து வந்த நிலையில் தற்போது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாத ஆரம்பத்தில் விருந்தகங்களை முன்பதிவு செய்த சுற்றுலாப் பயணிகள் அவற்றை ரத்து செய்துள்ளனர்.
கடந்த வாரத்தில் மாத்திரம் 40 சதவீதமான சுற்றுலாப் பயணிகள் தங்களது முன்பதிவுகளை ரத்து செய்துள்ளதாக விருந்தக உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.