இலங்கையைச் சேர்ந்த மேலும் மூவர் தமிழகத்திற்கு ஏதிலிகளாக சென்றுள்ளனர்.
மட்டக்களப்பைச் சேர்ந்த பெண் ஒருவரும் 2 சிறுவர்களும் இவ்வாறு தமிழகத்தின் தனுஸ்கோடியை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை தமிழக காவல்துறையினர் அவர்களை மீட்டுள்ளனர்.
முன்னதாக பல இலங்கையர்கள் தமிழகத்திற்கு ஏதிலிகளாக சென்றுள்ளனர்.
இந்தநிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தமிழக காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.