வீசா மற்றும் அமெரிக்க குடியுரிமைக்கான சேவை கட்டணம் என்பவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இதனை அறிவித்துள்ளது.
இலங்கையில் நாணய மாற்று விகிதம் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 25ஆம் திகதி முதல் இந்த கட்டண மாற்றம் அமுலாகும் என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது