சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் தலைத்தூக்கியுள்ளது.
அந்தவகையில், சீனாவின் ஷங்காய் நகரில் கொரோனா பரவல் உச்ச நிலையை எட்டியுள்ளது.
நாளாந்தம் 20,000 வரையான தொற்றாளர்கள் பதிவாகி வரும் நிலையில், பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
அதில் ஒரு முயற்சியாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கு, வீடுகளில் உள்ள மக்களை வெளியேற்றும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஷங்காய் நகரில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,417 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, 3 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நகரின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கை அமுல்படுத்தியுள்ள நிலையில் கூட, கொரோனா வைரஸ் தொற்றினால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.