ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டம் தொடர்பில் காவல்துறையினர் இன்று (18) கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
கோட்டை காவல்துறை உத்தியோகத்தர்கள் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவலவிடம் இந்த விடயத்தை அறிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
காலி முகத்திடல் பகுதியில் பெருமளவான மக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
எனவே, அமைதியை பாதிக்கும் வகையில் ஏதேனும் சம்பவம் நிகழ்ந்தால் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் நீதிமன்றில் அறிவித்தனர்.