மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது சமூக வலைத்தளங்களை செயலிழக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.
அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தற்போது பயன்பாட்டில் இல்லை.
அத்துடன், அவரது பேஸ்புக் கணக்கிலும் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக ட்விட்டரில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.