Friday, July 4, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅதிக விலைக்கு எரிபொருள் விற்பனை: ஒருவர் கைது

அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை: ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்து, மோசடியில் ஈடுபட்டு வந்த மற்றுமொரு நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, வத்தளை – ஹெந்தலவத்தை பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து 30 லீட்டருக்கும் அதிகமான பெற்றோல் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், அண்மையில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை செய்யும் 68 இடங்களைக் கண்டறிய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதன்போது, 8,025 லீட்டர் பெற்றோலும் 726 லீட்டர் டீசலும் கைப்பற்றப்பட்டதாக, காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles