ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பொறுப்புகளை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
இதன் மூலம் புதிய முகங்களை அமைச்சரவைக்கு உள்வாங்கி, மக்கள் போராட்டங்களை சமாளிப்பதற்கு அவர் முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அதேநேரம் எந்த ராஜபக்ஷகளுக்கும் பதவி வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் மஹிந்த ராஜபக்ஷவே பிரதமராக தொடர்ந்தும் செயற்படுவார்.
புதிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்கும் சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.