வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில், A4 காகித உற்பத்தி நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்ட A4 காகிதங்கள் உரிய தரத்துடன் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் ஜயம்பதி பண்டார ஹூன்கந்த தெரிவித்துள்ளார்.
மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் மாத்திரம் சிக்கல் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அரசாங்கத்தின் உதவியுடன், மூலப்பொருட்களை பெற்று காகித உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
இதன்மூலம், காகிதங்களுக்கான இறக்குமதி செலவினத்தை கட்டுப்படுத்தி, நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்க முடியும் என தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் ஜயம்பதி பண்டார ஹூன்கந்த குறிப்பிட்டுள்ளார்.