Wednesday, May 21, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலுமொருவர் மரணம்

எரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலுமொருவர் மரணம்

காலி –  ஹினிதும, தவலம பிரதேசத்தில் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் டீசல் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் இன்று (11) காலை உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் இன்று காலை தனது பாரவூர்திக்கு டீசலை பெற்றுக் கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்து சுமார் ஒரு மணிநேரம் வரை அங்கு காத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுகயீனம் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் காலி – ஹபரகடவைச் சேர்ந்த 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles