யாழ்ப்பாணம் – மணியந்தோட்டத்தில் கொலை செய்து புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அயல் கிராமத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் கடந்த முதலாம் திகதி தொடக்கம் காணாமல் போயிருந்தார்.
அதற்கமைய, காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த பெண்ணை கொலை செய்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் நேற்று கைதாகினர்.
பண கொடுக்கல் வாங்கல் காரணமாக எழுந்த முரண்பாட்டினால் சந்தேக நபர்கள் பெண்ணை அடித்துக் கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
பெண்ணின் சடலம் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து அவரின் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டது.
சடலம் மீட்கப்பட்ட குழியிலிருந்து அந்த பெண் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.