Wednesday, April 23, 2025
26 C
Colombo
செய்திகள்உலகம்இலங்கைக்கு நிதியுதவி வழங்கிய தமிழக யாசகர்

இலங்கைக்கு நிதியுதவி வழங்கிய தமிழக யாசகர்

தமிழகத்தில் உள்ள யாசகர் ஒருவர் இலங்கைக்கு நிதியுதவி வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தூத்துக்குடியைச் சேர்ந்த பூல் பாண்டியன் என்ற பெயருடைய அவர், யாசகத்தில் ஈட்டிய 83,000 ரூபாவை (இலங்கை மதிப்பில்) மதுரை மாவட்ட ஆட்சியாளரிடம் வழங்கினார்.

இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு உதவும் வகையில் அவர் இந்த பணத்தை திரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அவர் கொவிட் பரவலின் போது யாசகத்தில் ஈடுபட்டு ஈட்டிய பணத்தை நன்கொடையாக அளித்துள்ளார்.

2022 இல் நேர்காணல் ஒன்றில் பங்கேற்று கருத்து தெரிவித்த அவர், தான் பணத்தை விரும்பாதவர் எனவும், சம்பாதிக்கும் பணத்தை ஏழைகளுக்கு கொடுத்து உதவுவதாகவும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles