யாழ்ப்பாணம் – வழக்கம்பரை – தொல்புரம் பகுதியில் மிகவும் நூதனமான முறையில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அப்பகுதியில் தனியாக சென்ற பெண்ணின் தங்க சங்கிலியை உந்துருளியில் வந்த இருவர் பறித்து தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த பெண்ணிடம் வழி கேட்பது போல், அவரை அருகில் வரவழைத்து இந்த கொள்ளையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உந்துருளியில் பின்னால் அமர்ந்திருந்த நபர், கையில் பூஜைப் பொருட்களுடன் இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிசிரிவி காட்சிகளின் அடிப்படையில் வட்டுக்கோட்டை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.