மிகைவரி சட்டமூலம் பாராளுமன்றில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
வருடாந்தம் 2000 மில்லியன் ரூபாவுக்கு அதிக வருமானம் ஈட்டும் தனிநபர், நிறுவனங்களுக்கு ஒரே தடவையில் 25% வரி அறவிட இந்த சட்டமூலம் வழி செய்யும்.
முன்னாள் நிதியமைச்சர் பசில் இதனை முன்வைத்திருந்தார்.
இதன்மூலம் ETF, EPF போன்றவற்றுக்கும் வரி அறவிடப்படும் என குற்றம் சுமத்தப்பட்டது.
எனினும் ETF, EPF உள்ளிட்ட 9 நிதியங்களுக்கு இந்த வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.