மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அனஸ்தீஸியா போன்ற சத்திர சிகிச்சைகளுக்கு அத்தியாவசியமான மருந்து பொருட்கள் தனியார் மற்றும் அரச மருத்துவமனைகளில் இல்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் அரசாங்கம் மருந்து பொருள் கொள்வனவுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளதுடன், சுகாதார அவசர நிலையையும் பிரகடனப்படுத்தியுள்ளது.
இந்த நிலையை சீர்செய்ய கடும் பிரயத்தனம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.