நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் தமது தொழிற்றுறை மேலும் பாதிப்படைந்துள்ளதாக சுற்றுலாத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மின்துண்டிப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு என்பனவற்றால் இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அந்த தொழிற்றுறை குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்ந்தும் இந்த நிலை நீடிக்குமானால், இலங்கையின் சுற்றுலாத்துறை பாரிய வீழ்ச்சியினை சந்திக்கும்.
எனவே, இது தொடர்பில் அவதானம் செலுத்தி விரைவில் தீர்வு காண்பதற்கான காத்திரமான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு சுற்றுலாத் தொழிற்றுறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.