Wednesday, March 25, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி பதவி விலகாமல் வரும் எந்த யோசனைக்கும் ஆதரவில்லை

ஜனாதிபதி பதவி விலகாமல் வரும் எந்த யோசனைக்கும் ஆதரவில்லை

ஜனாதிபதி பதவியில் இருந்துகொண்டு முன்வைக்கும் எந்த யோசனைக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என ஜேவிபி தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், ஜனாதிபதியை பதவி விலக வேண்டும் என்று முன்னெடுக்கப்படும் போராட்டங்கள், அவர் பதவி விலகாமல் நிறுத்தப்படாது.

அவரால் முன்வைக்கப்படும் எந்த யோசனைகளையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

எனவே அவர் பதவி விலகி, அதன்பின்னர் நாட்டில் நிலவும் நெருக்கடி தொடர்பாக எடுக்கப்படுப்படும் ஒன்றிணைந்த முயற்சிகளுக்கு ஒத்துழைப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது உரையை அடுத்து எழுந்த அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ, ஜனாதிபதி பதவி விலக மாட்டார் என்று உறுதிபட அறிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles