கோதுமை மாவின் விலையை மேலும் 50 ரூபாவால் அதிகரிக்க கோதுமை மா நிறுவனங்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அண்மையில் கோதுமை மா கிலோவொன்றின் விலை 35 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.
அதற்கமைய, தற்போது ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 180 ரூபாவாக காணப்படுகிறது.
விலை அதிகரிப்பு காரணமாக வெதுப்பக உணவுகளின் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.