இலங்கையில் “பொது ஒழுங்கைப் பேணுவதற்காக” விதிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை ஐக்கிய நாடுகள் சபை நேற்று (06) வரவேற்றது.
கடந்த 5 ஆம் திகதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட பிரகடனத்தை ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிட்டார்.
இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர்-ஹம்டி, இதனை வரவேற்றுள்ளதுடன் இலங்கையர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் குறித்து தாம் மிகவும் வருத்தமடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது உடனடியாக பொருளாதார மீட்சியை ஏற்படுத்தக்கூடிய தீர்வுகள் நோக்கி செயல்பட வேண்டும் என அவர் சகல அரசியல் கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறார்.