நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய தினம் யாழ்பாணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இப்போராட்டமானது யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் ஆரம்பிக்கப்பட்டு மல்லாகம் சந்தி ஊடக சென்று சுன்னாகம் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொடும்பாவியை வீதியில் இழுத்து சென்று சுன்னாகம் பேருந்து நிலையத்தில் தீ மூட்டி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போதய அரசாங்கம் வீட்டுக்கு செல்லவேண்டும் எனவும் புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர்.