மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய கோரி, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கொழும்பில் தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக தற்போது கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
“வாழும் உரிமை மற்றும் ஆரோக்கியத்திற்கான உரிமை” ஆகியவற்றை உறுதி செய்வதற்காக சுகாதார துறைக்கு போதுமான நிதியை ஒதுக்குமாறு அதிகாரிகளை GMOA கோருகிறது.
அரசாங்கத்தின் மோசமான நிதி முகாமைத்துவம் காரணமாகவே இந்த ஏற்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.