நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.
மின்வெட்டு காலப்பகுதியில் ரயில் கடவைகளை கடக்கும்போது அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரயில் திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் (போக்குவரத்து) காமினி செனெவிரத்ன இதனை தெரிவித்தார்.
மின்வெட்டின் போது மின் விளக்குகளுக்கு பற்றரிகள் பயன்படுத்தினாலும் அவை சில நேரங்களில் இயங்குவதில்லை என அவர் தெரிவித்தார்.
அதனால் ரயில் கடவைகளை கடக்கும் போது அவதானத்துடன் செல்லுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.