நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.
யாழ்ப்பாணத்தில் மஹிந்தவின் படம் பொறித்த ஆயிரம் ரூபா தாள் காரணமாக அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
ஒருவர் மஹிந்தவின் படம் பொறித்த ஆயிரம் ரூபாவை அங்குள்ள வர்த்தக நிலையத்தில் வழங்கிய போது, அங்கிருந்தவர்கள் பணத்தை ஏற்க மறுத்துள்ளனர்.
இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.