அரச மற்றும் அரச அனுசரனைப்பெற்ற சகல பாடசாலைகளதும் மூன்றாம் தவணை இன்று (6) நிறைவடைந்தது.
இதன்படி 7ம் திகதி முதல் ஆரம்பமாகும் விடுமுறை காலம், ஏப்ரல் 18ம் திகதி வரையில் தொடரும்.
இந்த பாடசாலைகளுக்கான முதலாம் தவணை ஏப்ரல் 18ம் திகதி முதல் ஆரம்பமாகும்.
முன்னதாக 8ம் திகதி முதலே மூன்றாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.