கொழும்பு செட்டியார் தெருவில் தங்கத்தின் விற்பனை விலை திடீரென வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி தற்போது ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை 190,000 ரூபாவாக நிலவுகிறது.
நேற்றைவிட தங்கத்தின் விலை 10,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.
22 கரட் தங்கத்தின் ஒரு பவுணுக்கான விலை 175,000 ரூபாவாக நிலவுகிறது.
இது ஒரு தற்காலிக வீழச்சியே என செட்டியார் தெருவின் வியாபாரிகள் தெரிவித்தனர்.