நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு இந்த வாரத்துக்குள் தீர்வு காணுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் விசேட அறிக்கையை வாசித்த சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இந்த கோரிக்கையை விடுத்தார்.
நாட்டில் நிலவும் சகல நெருக்கடிகளுக்கும் இந்த வாரம் நிறைவடைவதற்கு முன்னர் அரசியல் யாப்பு ரீதியாக தீர்வு காணுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.