நாட்டின் சட்டமா அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட நேரும் என்று நாடாளுமன்றில் எச்சரிக்கப்பட்டது.
நாடாளுமன்றில் உரையாற்றிய விஜயதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தரப்பில் உள்ளவர்களை வழக்குகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் செயற்படுகிறார்.
மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையிலும் அவரது செயற்பாட்டுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலைமை தொடர்ந்தால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து அவரை வெளியேற்ற நேரும் என விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.