Thursday, January 16, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிரைவில் தேர்தல்?

விரைவில் தேர்தல்?

தற்போது நாடாளுமன்றம் தேர்தலை நடத்த தீர்மானித்தால் அதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராக இருப்பதாக அதன் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்துவது தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றில் எட்டப்படும் எனவும், அதற்கு தேவையான நிதி உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுமாயின் தேர்தலை நடத்த தயார் எனவும் அவர் தெரிவித்தார்.

தேர்தலை நடத்துவதற்கு சுமார் 3 மாதங்களேனும் தேவைப்படும். வேட்பாளர்களுக்கு தேர்தல் பிரசாரங்களுக்காக சுமார் 5 வாரங்கள் வழங்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, தேர்தல் நடத்தப்படுமாயின் வாக்குச் சீட்டுகள் உட்பட ஏனைய ஆவணங்களை அச்சிடுவதற்கு தேவையானளவு கடதாசிகள் கையிருப்பில் உள்ளதாக அரச அச்சகத்தின் தலைவர் கங்கானி கல்பனா லியனகே தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles