நிதி அமைச்சுப் பதவியில் இருந்து அலி சப்ரி விலகினார்.
நேற்று (04) நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர் ஒரே நாளில் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அத்துடன், அவர் அமைச்சர் பதவியிலிருந்தும் விலக தயாராக இருப்பதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.
அவர் பதவி விலகுவதற்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை சபையில் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
