எவன்கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இன்று (05) நாடாளுமன்ற அமர்வில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார்.
உடனடியாக சர்வதேச காவல்துறையினருக்கு அறிவித்து தப்பியோடிய அவரை கைது செய்யுமாறும் ஏனையோர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்குமாறும் சபாநாயகரிடம் அவர் கோரினார்.
அத்துடன், எவன்கார்ட் தளபதியை உடனடியாக கைது செய்யுமாறு பொது மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.