Wednesday, October 29, 2025
28 C
Colombo
அரசியல்நாடாளுமன்றில் இன்று கதிரைகளில் மாற்றம்?

நாடாளுமன்றில் இன்று கதிரைகளில் மாற்றம்?

அரசாங்கத்தை பதவி விலகக்கோரி நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் இந்த வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வு இன்று (05) ஆரம்பமாகிறது.

இதன்போது அரசாங்கத்தினால் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாமல் போகும் எனவும், புதிதாக பிரதமர் ஒருவர் நியமிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் 14 எம்.பிகளும், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் அடங்கிய 10 கட்சிகளின் 12 உறுப்பினர்களும் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர்.

அதேபோன்று SLPPயின் நிமால் லான்சா போன்ற 10க்கும் மேற்பட்ட எம்.பிகள் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இன்றைய நாடாளுமன்ற அமர்வு அமளி துமளிமிக்கதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles