ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலத்தில் அதிகாரம் பெற்றவர்களின் எழுத்தாவணம் இன்றி யாரும் பொதுவெளிகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று (02) மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 6 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.