பாடசாலை நடத்தப்படும் காலத்தை மேலதிகமாக ஒரு மணி நேரத்தால் அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இவ்வாறு ஒரு மணி நேரம் பாடசாலை நேரத்தை அதிகரித்து இந்த ஆண்டு பாடசாலைகள் இடம்பெறும் நாட்கள் 139 வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரச மற்றும் அரச அனுசரணைப் பெற்ற தனியார் பாடசாலைகளில் இந்த நேரமாற்றம் அமுலாகும்.
அதேநேரம் இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள் ஒக்டோபர் மாதம் நடத்தப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் இந்த ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைகளை 2023ம் ஆண்டின் முற்பகுதியில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.