இலங்கையில் அவசரக்கால நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ளமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கரிசனை வெளியிட்டுள்ளது.
இலங்கை மக்களின் ஒன்று கூடல் மற்றும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான உரிமையை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.
இலங்கை மக்களுக்கு இதுவொரு சவாலான கால கட்டம். இது குறித்து உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறோம் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.