சுன்னாகம் – தாவடி தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
மூன்று உந்துருளிகளில் வந்த 6 பேர் கொண்ட குழுவினரால் அங்கிருந்த உந்துருளிக்கு தீ வைக்கப்பட்டுள்ளதுடன், வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் 02 உந்துருளிகள் மற்றும் வீட்டின் 06 ஜன்னல்களும், இரண்டு கண்ணாடி மேசைகளும் சேதமாகியுள்ளன.
இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.