மிரிஹானையில் ஜனாதிபதியின் இல்லத்துக்கு அருகில் நேற்று (31) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.
அமைதியாக இடம்பெற்ற இந்த போராட்டத்தை குழப்பியடிக்கும் வகையில் சில குழுக்கள் வன்முறையில் ஈடுபட்டிருப்பதாக சிரேஷ்ட காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட பரிசீலனையின் அடிப்படையில் 39 மில்லியன் ரூபா அளவான பொதுசொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.
24 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த போராட்டத்தில் குழப்பம் விளைவித்தவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான தீவிர விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.