மிரிஹான போராட்டம் குறித்த விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவிடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்துக்கு அருகில் இந்த போராட்டம் இடம்பெற்றது.
சம்பவத்தில் 5 காவல்துறையினர் ஒரு ஊடகவியலாளர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுவரையில் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.