இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக ட்வைன் பிராவோ பதிவானார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்கு எதிரான ஐபிஎல் 2022 போட்டியின்போது பிராவோ இந்த சாதனையை நிகழ்த்தினார்.
இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவும் அவரும் தலா 170 விக்கெட்டுகளுடன் சமநிலையில் இருந்தனர்.
பிராவோ, IPLஇல் தனது 171வது விக்கெட்டாக தீபக் ஹூடாவை வெளியேற்றி, மலிங்கவை முந்தினார்.
எனினும் மலிங்க 122 IPL போட்டிகளில் மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளபோதும். அவரை விட 30 போட்டிகள் அதிகமாக விளையாடி பிராவோ இந்த சாதனையை முறியடித்தார்.