இலங்கையில் பல்வேறு அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட மருந்துகளுக்கும் மருத்துவ உபகரணங்களுக்கும் இன்னும் கொடுப்பனவு செலுத்தப்படவில்லை.
வெளிநாடுகளிலிருந்து மருந்து மற்றும் மருத்துவ கருவிகளை இறக்குமதி செய்வதற்கான நாணயக் கடிதங்களை திறப்பதற்கான டொலர் பற்றாக்குறை நிலவுகிறது.
இது சம்பந்தமாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மற்றும் மருந்து விநியோகத் துறை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன ஆகியோர் நேற்று (31) ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த விடயத்தில் “மக்களை புரியவைப்பதைத் தாண்டி வேறு எதுவும் தம்மால் செய்ய முடியாது” என ஜனாதிபதி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன