பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நேற்றிரவு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்திற்குச் சென்றுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் ஜனாதிபதியின் இல்லத்திற்கு சென்றார்.
இந்த போராட்டத்தின் போது பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், இராணுவத்தினர், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் காயமடைந்தனர்.
மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் மீது தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் சமூக ஊடக குழுக்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தின் போது காவல்துறை கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீச்சு தாக்குதல் நடத்தி இருந்தனர்.