மிரிஹானையில் நேற்று (31) இடம்பெற்ற போராட்டம் பெரும் சர்ச்சைக்குள்ளானதுடன், சர்வதேச ஊடகங்களில் பேச்சுப் பொருளாகியுள்ளது.
அல் ஜசீரா, வொஷிங்டன் போஸ்ட், ஏபி, ஏஎஃப்பி மற்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ்> இந்தியா டுடே ஆகிய ஊடகங்களில் இலங்கை ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
அரசாங்கத்தின் பலவீனம் காரணமாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, எரிவாயு, மின்சாரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு போன்றவற்றை பொறுக்க முடியாமல் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.