இவ்வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஆகஸ்ட் மாதத்திலேயே நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கான மருத்துவ பீடமொன்றை இவ்வருடம் திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.