முகக்கவசம் அணியும் கட்டாயத்தை நீக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதாக அறியமுடிகிறது.
எனினும் இப்போதைக்கு அதற்கான சாத்தியம் இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.
தற்போது 3 தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களின் வீதம் 52%-54% க்கு இடையில் உள்ளது.
நாட்டில் 80%மான மக்கள் 3 தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டதன் பின்னரே முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்ற அறிவிப்பு வெளியாகும் என அவர் கூறியுள்ளார்.