ஏறாவூர் பகுதியில் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்துள்ளார்.
ஏவுக்கடி பகுதியைச் சேர்ந்த 36 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கணவன்-மனைவி இடையே நீண்ட நாட்களாக நிலவி வந்த தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர் தற்போது அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.