இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் கிலோவொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்களால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் கிலோவொன்றின் மொத்த விலை நேற்று 110 ரூபாவிலிருந்து 210 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த திடீர் விலை அதிகரிப்பு நியாயமற்றது எனவும், இதனால் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.