Thursday, January 16, 2025
25.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிங்கப்பூருக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்ய தயாராகும் அரசு?

சிங்கப்பூருக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்ய தயாராகும் அரசு?

எதிர்காலத்தில் இலங்கைக்கு அதிக அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுக்கும் துறையாக மின்துறையை மாற்றுவோம் என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வெளிநாட்டு முதலீட்டின் ஊடாக ஹம்பாந்தோட்டை கடலில் 5000 மெகாவோட் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதிலிருந்து 1000 மெகாவோட்டை இலங்கைக்கு பெற்று, எஞ்சிய 4000 மெகாவோட்டை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்ய எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டு முதலீட்டின் ஊடாக இலங்கையில் உள்ள 100,000 வீடுகளின் கூரைகளில் சோலர் பேனல்கள் மூலம் 500 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles