இந்த வாரத்துக்கு இலங்கைக்குத் தேவையான எரிபொருள் தாங்கிய கப்பல் ஒன்று சர்வதேச கடல்பரப்பில் நங்கூரமிட்டுள்ளது.
இந்த கப்பலுக்கான கொடுப்பனவு செலுத்தப்படும் வரையில் இலங்கை கடல்பரப்புக்குள் வர முடியாது என்று அந்த கப்பலின் தலைவர் அறிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்ததும் கட்டணம் செலுத்தப்படும் என ஜனாதிபதியால் உறுதியளிக்கப்பட்ட போதும், அதனை கப்பல் தலைவர் ஏற்க மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கப்பலில் எந்த அளவு எண்ணெய் இருக்கிறது என்ற விபரம் வெளியாகாத நிலையில, இது இலங்கைக்கு வரவில்லை என்றால் நாட்டில் நிலவுகின்ற எரிபொருள் தட்டுப்பாடு மேலும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அதேநேரம் எண்ணெய்க் கப்பல்களுக்கான கட்டணம் செலுத்தாமையினால், தாமத கட்டணமாக பல மில்லியன் டொலர்களை இலங்கை செலுத்த வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.